சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1158 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைது
கடற்படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று, புத்தளம் தளுவ பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரயானம் செய்து கொண்டிருந்த நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் மற்றும் அறுபது (60) கிராம் உலர் இஞ்சி மற்றும் நாற்பத்தைந்து (45) கிலோகிராம் உலர் கருவாடு, 01 கெப் வண்டியுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபன்னி நிறுவனத்தினால் புத்தளம் தளுவ பிரதேசத்தில் 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனையிடப்பட்டது. அங்கு கெப் வண்டியில், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்(32) பைகளில்பொதிச்செய்திருந்த நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் காய்ந்த இஞ்சி, நாற்பத்தைந்து (45) கிலோ காய்ந்த கருவாடு, (01) ஒரு கெப் மற்றும் மூன்று (03) சந்தேகநபர்கள் ஆகியோருடன் கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் மற்றும் மணல்தொட்டன் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரும், உலர் இஞ்சி, உலர் கருவாடு மற்றும் கெப் வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.