கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க கப்பல் நிலையத்தில் இருந்த கொள்கலனில் ஏற்பட்ட திடீர் தீயை அனைப்பதற்கு கடற்படையின் உதவி

கொழும்புத் துறைமுகத்தின் பண்டாரநாயக்க கப்பல் நிலையத்தின் நான்காவது முற்றத்தில் (BQ4) இருந்த கொள்கலனில் ஏற்பட்ட திடீர் தீயை அனைப்பதற்கு மேற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவின் உதவியை 2025 ஜனவரி 30 அன்று இரவு கடற்படையால் வழங்கப்பட்டது.

2025 ஜனவரி 30, அன்று இரவு 1945 மணியளவில், கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க கப்பல் நிலையத்தின் நான்காவது முற்றத்தில் (BQ IV) இருந்த ஒரு கொள்கலனில் புகை வெளியேறுவதாகவும், மற்றும் அதைச் சரிபார்க்க தீயணைப்புக் குழுவின் உதவியை வழங்க வேண்டும் எனவும் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேற்கு கடற்படை கட்டளை நடவடிக்கை அறைக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) என்பனவையுடன் அவசரநிலைகளில் எதிர்த்துப் போராடுவது தொடர்பான சிறப்புப் பயிற்சி பெற்ற குழுவையும், தீயணைப்பு இயந்திரங்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்ப கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடற்படை தீயணைப்பு குழுவினரால், புகை வெளியேறிய கொள்கலனை பத்திரமாக திறந்து அதில் அடைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு பொருட்களின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பின்னர் துறைமுக ஊழியர்கள் மற்றும் துறைமுக தீயணைப்பு குழுவினர் உதவியுடன் கொள்கலனில் அடைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு பொருட்கள் விரைவாக அகற்றப்பட்டு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.