தலைமன்னாரில் 3,492 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், மற்றும் விமானப்படையினர் இணைந்து 2025 ஜனவரி 27 ஆம் திகதி தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூவாயிரத்து நானூற்று இரண்டு (3,492) சங்குகளுடன், சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, 2025 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கஜபா நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, மன்னார் விமானப்படை தளத்துடன் இணைந்து கஜபா நிறுவனத்தின் கடற்படையினர், தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட மூவாயிரத்து நானூற்று இரண்டு (3,492) ஹேக் சிப்பிகளுடன் சங்குகளுடன், சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேசாலையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் மற்றும் சங்குகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்படன.