கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி
இலங்கைக்கு தென்மேற்கு திசையில், காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 78 கடல் மைல் (சுமார் 144 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (2024 நவம்பர் 20) கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2024 நவம்பர் 17 ஆம் திகதி ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ‘Thewjan Putha’ (பதிவு எண். IMUL-A-1043GLE) படகில் இருந்த மீனவர் ஒருவர், மீன்பிடித்த போது நெஞ்சுவலி காரணமாக நோய்வாய்ப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படையின் உதவியைக் கோரி மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.
இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை விரைவாக கரைக்கு கொண்டு வர தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட விரைவு தாக்குதல் படகொன்றை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டு, இன்று (2024 நவம்பர் 20,) கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.