சுமார் 18 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 45 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைது செய்யப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், இலங்கை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதி உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடலோர ரோந்து படகுகள் மூலம் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பொலித்தீன் பைகள் அவதானித்து சோதனை செய்யப்பட்டது. அங்கு, இரண்டு (02) பொலித்தீன் பைகளில் இருபது (20) பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த 45 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படை நடவடிக்கையின் காரணமாக கடத்தல்காரர்களால் கடற்பரப்பில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 18 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை கடற்படையின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.