நாமல் ஓய மற்றும் பொரபொல நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள், அவசர கதவுகள் மற்றும் வடிகால்களை சரிசெய்வதற்கு கடற்படை சுழியோடி பிரிவின் உதவி
அம்பாறை, இகினியாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாமல் ஓய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் அவசர கதவுகளை சரிசெய்வதற்கும், மஹாஓய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொரபொல நீர்த்தேக்கத்தின் வடிகால்களை சரிசெய்வதற்கும் 2024 டிசம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் கடற்படையின் சுழியோடி உதவிகள் வழங்கப்பட்டது.
இதன்படி, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவினால் இந்த உதவி வழங்கப்பட்டது.