யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து 75 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் இன்று (04 டிசம்பர் 2024) காலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்து எட்டு (188) கிலோ முந்நூற்று ஐம்பது (350) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினர் யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் இன்று (2024 டிசம்பர் 04) மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டதுடன் குறித்த டிங்கி படகில் ஏழு (07) பொதிகளில் அடைக்கப்பட்ட நூற்றி எண்பத்து எட்டு (188) கிலோ முந்நூற்று ஐம்பது (350) கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 75 மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நூற்றி எண்பத்து எட்டு (188) கிலோ முந்நூற்று ஐம்பது (350) கிராம் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.