சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 733 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி, மொஹொத்துவாரம கடற்கரைப் பகுதியில் 2024 டிசம்பர் 01 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுநூற்று முப்பத்து மூன்று (733) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், இலங்கை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதி உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2024 டிசம்பர் 01 ஆம் திகதி கல்பிட்டி, மொஹொத்துவாரம கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருபத்தி நான்கு (24) பொதிகள் காணப்பட்டதுடன் குறித்த பொதிகள் ஆய்வு செய்யும் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று முப்பத்து மூன்று (733) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மெற்கொள்ளும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.