அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட வெள்ளப் நிவாரண குழுக்கள், இன்றும் (2024 டிசம்பர் 01) தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, பெய்த கனமழை காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் பராக்கிரமபுர (மாஓய), புத்தங்கல (மணல் கால்வாய்), திருகோணமலை மாவட்டத்தில் மைலப்பஞ்சேனி, சாபிநகர், முத்துச்சேன்னாய் (துப்பாக்கி சந்தி) ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் ஆறு (06) நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிங்கி படகுகள் மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள், சமைத்த உணவு விநியோகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், கடற்படையால் நாட்டில் தேவைக்கேற்ப பல நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.