ஐஸ் என்ற போதைப்பொருளை கடத்திச் சென்ற இலங்கையின் மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, ஐஸ் என்ற போதைப்பொருளை (Crystal Methamphetamine) பெருமளவு ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகொன்றுடன் (01) இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் குழுவொன்று 2024 நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில் இந்திய கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2024 நவம்பர் 29,) இலங்கை கடற்படை கப்பல் கஜாபாகுவிடம் இந்திய கடற்படையால் ஒப்படைக்கப்பட்டதுடன் அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன.