சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் 2024 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து ஐம்பத்தைந்து (1055) கடலட்டைகளுடன், ஐந்து (05) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ நிறுவனத்தின் கடற்படையினர், 2024 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை மன்னார் வங்காலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் அறுநூற்று நான்கு (604) கடலட்டைகளுடன், மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர், மன்னார் சிலாவத்துறை கரையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் நானூற்று ஐம்பத்தொரு (451) கடலட்டைகளுடன், இரண்டு (02) சந்தேக நபர்களுடன் மொத்தம் ஆயிரத்து ஐம்பத்தைந்து (1055) கடலட்டைகளுடன், ஐந்து (05) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வங்காலை மற்றும் சிலாவத்துறையில் வசிக்கும் 28 முதல் 62 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் மற்றும் கடலட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பரிசோதகர் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.