இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2024 நவம்பர் 12) யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நாட்டு கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இன்று (2024 நவம்பர் 12) அதிகாலை, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்று குறித்த கட்டளையின் துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் படகில் இருந்த 12 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இந்த நடவடிக்கையுடன், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 66 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 497 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.