சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூன்று பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார் வான்காலை பிரதேசத்தில் இன்று (2024 நவம்பர் 09) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது, பிடிக்கப்பட்ட சுமார் ஐந்நூற்று எண்பத்தைந்து (585) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் மூன்று (03) பேர் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, (2024 நவம்பர் 09) அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான புஸ்ஸதேவ நிறுவனத்தின் கடற்படையினரால், மன்னார் வான்காலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது பிடிக்கப்பட்ட சுமார் சுமார் ஐந்நூற்று எண்பத்தைந்து (585) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் மூன்று (03) பேர் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 36 வயதுடைய வான்காலை மற்றும் சிலாவத்துறை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் ஆறு பேர், கடலட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி உதவி மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.