சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2024 நவம்பர் 07 ஆம் திகதி மன்னார் சௌத்பார் கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (10) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2024 நவம்பர் 07 ஆம் திகதி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார், சவுத்பார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (10) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட மன்னார், தாவுள்பாடு, கல்பிட்டி மற்றும் கீரே ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், குறித்த சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.