சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2024 நவம்பர் மாதம் 05 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிறுவனத்தின் கடற்படையினர், திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 முதல் 37 வயதுக்கு இடைப்பட்ட குச்சவெளி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்களுடன் டிங்கி படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.