ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் நாகவில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இன்று (2024 நவம்பர் 01) புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் போதைப்பொருள் எட்டு (08) கிராம், வெளிநாட்டு சிகரெட்டுகள் முந்நூற்று இருபது (320), கோடா லீற்றர் நானூற்று நாற்பது (440) மற்றும் நூற்று (100) லீற்றர் மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் நூறு (100) லீற்றர் மதுபானத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர், புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இன்று (2024 நவம்பர் 01) புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிடப்பட்டது. அங்கு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் போதைப்பொருள் எட்டு (08) கிராம், வெளிநாட்டு சிகரெட்டுகள் முந்நூற்று இருபது (320), கோடா லீற்றர் நானூற்று நாற்பது (440) மற்றும் நூற்று (100) லீற்றர் மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் நூறு (100) லீற்றர் மதுபானத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த இரண்டு (02) சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட், கோடா, ஸ்பிரிட் மற்றும் சட்டவிரோத மதுபானம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.