சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் திருகோணமலையில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை அடுக்குப்பாடு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2024 நவம்பர் 01 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி அடமுக்குப்பாடு கடற்பகுதியில், மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) மீனவர்களுடன் ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 முதல் 44 வயதுக்குட்பட்ட நிலாவெளி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த சந்தேகநபர்களுடன் டிங்கி படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.