சட்டவிரோதமான முறையில் பிடித்த கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் வெண்புரவிநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகு ஒன்றும் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ நிருவனத்தின் கடற்படையினர், ஒக்டோபர் 29ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் வெண்புரவிநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுமார் இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகள் நிலத்திற்கு கொண்டு செல்லப்படும் போது குறித்த சந்தேகநபர்கள், இழுவை படகு மற்றும் கடலட்டைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், யாழ்ப்பாணம் அல்லய்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் மற்றும் சுமார் இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகள் மற்றும் சந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைட்ஸ், வேலணை மீன்வளத்துறை அலுவளகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.