இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் (2024 ஒக்டோபர் 27) யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பன்னிரெண்டு (12) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, (2024 ஒக்டோபர் 27) இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கை, அந்த கட்டளைக்கு சொந்தமான வேகமான தாக்குதல் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொண்டனர். அங்கு யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பன்னிரெண்டு (12) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்று (01) மற்றும் பன்னிரெண்டு (12) இந்திய மீனவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அறுபத்தி இரண்டு (62) இந்திய மீன்பிடிக் படகுகள் மற்றும் நானூற்று நானூற்று அறுபத்தி இரண்டு (462) இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.