சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2,040 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளம் மற்றும் நொரோச்சோலை பகுதியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 செப்டெம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புத்தளம் தீவு பாலாவிய மற்றும் நொரோச்சோலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் இரண்டாயிரத்து நாற்பது (2,040) கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் (ஈரமான எடை) லொறி வண்டியொன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரின் மூலம், 2024 ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புத்தளம் தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவில் மிதந்துக் கொண்டிருந்த சுமார் முப்பத்தி எட்டு 38 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், 2024 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால், புத்தளம் பாலாவி பகுதியில் இருந்த லொறி வண்டியொன்றில், (01) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அறுபது (60) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தி நான்கு (1,534) கிலோ ஒன்பது நூறு (900) கிராம் பீடி இலைகளுடன், ஒரு லொறி வண்டியையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் ரோந்துக் படகினால் 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி நொரோச்சோலைப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடலில் மிதந்துக் கொண்டிருந்த பதின்மூன்று (13) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் நானூற்று அறுபத்தேழு (467) கிலோ எழுபது (70) கிராம்களாக, இரண்டாயிரத்து நாற்பது (2,040) கிலோகிராம்களுக்கு அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம், புத்தளம் தீவு மற்றும் பாலாவிய பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்திற்கு, நொரோச்சோலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு.