சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 பேர் கிழக்கு கடலில் கடற்படையினரால் கைது

திருகோணமலை சல்லிக்கோவில் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள், ஒரு (01) டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜயபா கடற்படை நிலையத்தினால் சள்ளிக்கோவில் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த சிறிய படகொன்றை (01) அவதானித்து பரிசோதித்த போது. சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள், ஒரு (01) டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 57 வயதுடைய சல்லிசாம்பலதீவு பகுதியில் வசிப்பவர்கள் எனவும், குறித்த இரண்டு (02) சந்தேகநபர்கள், சிறிய டிங்கி படகு (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.