சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் வடமேற்கு கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், புத்தளம் முதல் சிலாவத்துறை வரையிலான வடமேற்கு கரையோரப் பகுதி மற்றும் அதனைச் சார்ந்த கரையோரப் பகுதியிலும் 2024 ஒக்டோபர் மாதம் 10 முதல் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனம், இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனம் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பரண ஆகிய நிருவனத்தினால், புத்தளம் மாம்புரி கடற்கரை பகுதி, சிலாவத்துறை, கல்ஆறு, அரிப்பு மற்றும் கொக்குபடையான் கடற்கரையை உள்ளடக்கி, 2024 ஒக்டோபர் மாதம் 10 முதல் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கரையை நோக்கி மிதந்து கொண்டிருந்த, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து அறுபத்தாறு கிலோ இருநூறு கிராம் (1066.200) பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மற்றும் மன்னாரில் உள்ள கலால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.