சுமார் 13 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 33 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 17 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது மற்றும் கச்சத்தீவு பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் முப்பத்து மூன்று கிலோ என்பத்து எட்டு கிராம் (33.88) கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை நிறுவனத்தின் கடற்படையினர் வழங்கிய தகவலின் படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்களான கஜபா மற்றும் புஸ்ஸதேவ ஆகிய நிறுவனத்தின் கடற்படையினர், மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஒக்டோபர் 17 ஆம் திகதி, தலைமன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பகுதியில் சென்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அங்கு நான்கு (04) பார்சல்களில் அடைக்கப்பட்ட 08 கிலோ 88 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
மேலும், வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படையினரால் 2024 ஒக்டோபர் 17 ஆம் திகதி கச்சத்தீவு பகுதியில் நிறுவப்பட்ட மரைன் படைப் பிரிவை பயன்படுத்தி மேற்கொண்ட ஒரு நடைபயணத்தில் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த எட்டு (08) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் இருபத்தைந்து (25) கிலோ கேரள கஞ்சா (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த வீதி மதிப்பு பதின்மூன்று (13) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், தலைமன்னார், நடுகுடா பகுதியில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கேரள கஞ்சா தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும், கச்சத்தீவுப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.