காலி, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது
காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அகலிய பாலம் மற்றும் தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 அக்டோபர் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழை பெய்து கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றங்கரையோரப் பகுதியில் அலட்சியமாக கொட்டப்படும் குப்பை, வெட்டப்பட்ட மரங்கள், மூங்கில் புதர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, குறுகிய பாலங்களில் சிக்கிக் கொள்கின்றன. மேலும் தண்ணீர் படிப்படியாக உயர்வதால், கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த வெள்ள அபாயத்தைத் தடுக்க கடற்படையால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, அகலிய பாலம் மற்றும் தொடங்கொட பாலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அப்பகுதியில் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்காக, 2024 அக்டோபர் 14 ஆம் திகதி தெற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.