கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி
இலங்கைக்கு தென்மேற்கு திசையில்,தெவுந்தர முனையில் இருந்து 881 கடல் மைல் (சுமார் 1631 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் வெளிநாட்டுக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின் இன்று (2024 அக்டோபர் 15) அவரை கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2024 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆறு (06) மீனவர்களுடன் சென்ற “Sun City 02” (பதிவு எண். IMUL-A- 1671 MTR) படகில் இருந்த ஒரு மீனவர், வயிற்று நோயினால் பாதிக்கப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படையின் உதவியைக் கோரி மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.
இதன்படி, உடனடியாக நடவடிக்கை எடுத்த கடற்படையினர், ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை அழைத்து வர கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், குறித்த கடற்பகுதியில் பயணித்த ‘MV – CCNI Andes’ என்ற வெளிநாட்டுக் கப்பல் குறித்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவரை ‘MV – CCNI Andes’ கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்ட பின் இன்று (2024 அக்டோபர் 15,) குறித்த கப்பல் மூலம் கொழும்பு துறைமுக கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர், நோய்வாய்ப்பட்ட மீனவரை விரைவாகக் கரைக்கு கொண்டுவருவதற்காக மேற்கு கடற்படைக் கட்டளைக்கு இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் படகொன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, குறித்த மீனவரை கரைக்குக் கொண்டு வந்த பின் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையைச் சேர்ந்த கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தயாராக உள்ளது.