மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கடற்படை வெள்ள அனர்த்த நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன
சீரற்ற காலநிலையினால் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (12 ஒக்டோபர் 2024) மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்படையின் ஆறு (06) வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.
கனமழை காரணமாக அத்தனகலு ஓய மற்றும் களனி ஆறு நிரம்பி வழிவதால், கடுவெல, பியகம மற்றும் இஹலகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில், ஆறு வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்கள் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகள் இன்று (2024அக்டோபர் 12) குறித்த நிவாரணக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் 24 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் 9 குழுக்களும், வடமேற்கு கடற்படை கட்டளையில் 11 குழுக்களும் என மொத்தம் 44 குழுக்கள் தேவைப்படும் போது உடனடியாக அனுப்புவதற்கு தயாராக உள்ளன.