1500 வெளிநாட்டு சிகரட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு ஹெட்டியாவத்தை மற்றும் தலைமன்னார், பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 1500 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி, கொழும்பு கரையோர பொலிஸ் நிலையத்துடன் இணைந்து கொழும்பு ஹெட்டியாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட 1,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினம், வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்திக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 300 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் சந்தேக நபர் ஒறுவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் எனவும் பெண் சந்தேக நபர் பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரையோரப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், பெண் சந்தேகநபரும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் பேஸாலை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.