சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1318 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் தலைமன்னார் மற்றும் மன்னார் கடற்பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் 1318 கிலோ 22 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி தலைமன்னார் நடுகுடா கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கரை ஒதுங்கிய நான்கு (04) பைகளில் அடைக்கப்பட்டிருந்த இருநூற்று ஆறு கிலோ ஐந்நூறு கிராம் (206.500) பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் தலைமன்னார் பழைய பாலம் கடற்கரைப் பகுதியிலும், மன்னார் கடற்பகுதியிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடலில் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் பதினாறு (16) பைகள் மற்றும் ஒன்பது. (09) பார்சல்கள் அடைக்கப்பட்டிருந்த சுமார் 1050.800 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் 2024 செப்டெம்பர் 22 ஆம் திகதி மன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 60 கிலோ 920 கிராம் எடையுள்ள (ஈரமான எடை) பீடி இலைகள் ஒரு கையிருப்பு கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது தலைமன்னார் மற்றும் மன்னார் பகுதிகளில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.