சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 506 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 20 ஆம் திகதி புத்தளம் மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் ஐந்நூற்று ஆறு (506) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றினர்.

அதன்படி, 2024 செப்டெம்பர் 20 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் புத்தளம் சின்னபாடு மற்றும் தலுவ கடற்கரை பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரையில் கரையொதுங்கிய பதின்மூன்று பொதிகளில் அடைக்கப்பட்ட (13) நானூற்று அறுபத்தி ஒன்பது கிலோ மற்றும் முன்னூறு கிராம் எடையுள்ள பீடி இலைகளும் வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்கரை பகுதிக்கு கரை ஒதுங்கிய ஒரு பார்சலில் இருந்து சுமார் 36.7 கிலோ கிராம் பீடி இலைகளும் உடன் மொத்தமாக (ஈரமான எடை) சுமார் ஐந்நூற்று ஆறு (506) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் புத்தளம் கரையோரப் பிரதேசங்களில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை, கடற்படையின் பாதுகாப்பான காவலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 88 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நாற்பத்தெட்டாயிரத்திற்கும் அதிகமான (48,000) கிலோகிராம் பீடி இலைகளை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.