சுமார் 37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பளை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை; பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி சாவகச்சேரி பளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொண்ணூற்று நான்கு (94) கிலோ ஐந்நூற்றி இருபது (520) கிராம் கேரள கஞ்சாவுடன், சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டி (01) கைது செய்யப்பட்டன.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை வெத்தலகேணி நிறுவனம்; நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சாவகச்சாரி பளை பிரதேசத்தில் 2024 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு குறித்த வீட்டில் நான்கு (04) பைகளில் ஐம்பத்திரண்டு (52) பார்சல்களாக பொதி செய்யப்பட்டிருந்த தொண்ணூற்றி நான்கு (94) கிலோ ஐந்நூற்று இருபது (520) கிராம் கேரள கஞ்சா மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கெப் வண்டி ஒன்றுடன் (01), சந்தேக நபர் ஒருவரும் (01) கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி முப்பத்தேழு (37) மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டி (01) ஆகியவற்றை பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.