சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 371 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி புத்தளம் கரம்ப வீதித்தடை ஏற்பாட்டிற்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எழுபத்தியொரு (371) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுடன் (01) சந்தேக நபர் ஒருவரை (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபண்ணி நிறுவனத்தின் கடற்படையினர், 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி நொரச்சோலை பொலிஸாருடன் இணைந்து புத்தளம் கரம்ப வீதித் தடைக்கு அருகில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீதித் தடுப்பின் ஊடாக சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த வேன் ஒன்றை சோதனையிட்ட போது, குறித்த வேனில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பதினொரு (11) பைகளில் அடைக்கப்பட்ட சுமார் முந்நூற்று எழுபத்தொரு (371) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சந்தேகநபர் ஒருவர் (01) வேன் ஒன்றுடன் (01) சந்தேக நபர் ஒருவரும் (01) கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் (01), பீடி இலைகள் மற்றும் வேன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.