சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 843 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி சிலாபம் குளத்தின் மையக்குளம பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்ணூற்று நாற்பத்து மூன்று (843) கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல நிருவனத்தின் கடற்படையினர் 2024 செப்டெம்பர் 04 ஆம் திகதி சிலாபம் குளத்தின் மைக்குளம பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த குளத்து பகுதியில் அடர்ந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (28) சாக்குகளில் இருந்த சுமார் 843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, பீடி இலைகளுடன் 25 கிலோ எடையுள்ள அம்மோனியம் பைகார்பனேட் பையொன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், பீடி இலைகள் மற்றும் அம்மோனியம் பைகார்பனேட் கொண்ட பையை மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை வைக்காலை மதுவரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்டைடது.