ஆழ்கடலில் விபத்துக்குள்ளான "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட 4 மீனவர்களும் கஜபாகு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது
2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி காலியில் இருந்து சுமார் 241 கடல் மைல் (501 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் தத்தளித்த "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகில் இருந்து "லசந்த 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகு மூலம் மீட்கப்பட்ட நான்கு (04) மீனவர்களையும் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு கப்பலிடம் ஆழ்கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக 2024 செப்டெம்பர் 4 ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படையினர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு 2024 செப்டெம்பர் 03 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஆபத்திற்குள்ளாகிய, "நிஹாதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகில் இருந்து மீட்கப்பட்ட நான்கு (04) மீனவர்களை விரைவாகக் கரைக்குக் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு கப்பலை 2024 செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி குறித்த கடல் பகுதிக்கு அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்தது.
இதன்படி, 2024 செப்டெம்பர் 04 ஆம் திகதி காலை காலியில் இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 158 கடல் மைல் (292 கி.மீ) தொலைவில் “லசந்த 01” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலினால் மீட்கப்பட்ட நான்கு (04) மீனவர்களும் இலங்கை கடற்படை கப்பல் கஜபாகு கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், கஜபாகு கப்பலின் கடற்படை மருத்துவக் குழுவினால் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டன.
மேலும், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் துயரத்தில் வாடும் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படை தொடர்ந்து தயாராக உள்ளது.