கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2024 செப்டெம்பர் 01 ஆம் திகதி கல்பிட்டி குறிஞ்சாப்பிட்டி மற்றும் சின்னகொடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஒரு (01) கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டியொன்று (01) கைது செய்யப்பட்டது.
இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர், புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருடன் இணைந்து 2024 செப்டெம்பர் 01 ஆம் திகதி கல்பிட்டி குறிஞ்சாப்பிட்டி மற்றும் சின்னகொடியிருப்பு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது குறிஞ்சாப்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனையிடப்பட்டனர். அப்போது குறித்த கெப் வண்டியில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 800 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு காணப்பட்டதுடன், குறித்த கெப் வண்டி (01) மற்றும் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது, சின்னக்கொடியிருப்பு பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது, சுமார் 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய பொதியும் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் (ரூ. 400,000) என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்பிட்டி சின்னக்கொடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டி (01) என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.