சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது
இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து இன்று (2024 ஜூலை 06,) நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட சுமார் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம், இன்று (2024 ஜூலை 06,) கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த சுமார் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.