05 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 03 சந்தேகநபர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
வத்தளை பகுதியில் இன்று (ஜூன் 24, 2024) இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட சுமார் இருநூறு (200) கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள், (02) ஒரு பெண் சந்தேகநபர் (01) மற்றும் முச்சக்கரவண்டி (01) ஒரு தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (2024 ஜூன் 24,) வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு குறித்த விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முச்சக்கரவண்டியில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருநூறு (200) கிராம் ஹெரோயினுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள், மற்றும் பெண் சந்தேகநபர் (01) மற்றும் முச்சக்கரவண்டி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் வீதி மதிப்பு ஐந்து (05) மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 48 வயதுக்கு இடைப்பட்ட நீர்கொழும்பு மற்றும் கொழும்பில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த மூன்று சந்தேகநபர்கள் (03), முச்சக்கரவண்டி (01) மற்றும் இருநூறு கிராம் (0.200) ஹெரோயினுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.