சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூன் 24,) மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாற்பத்தாறு (46) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ண்டு வருகின்றனர்.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பலான கஜபாவினால் இன்று (2024 ஜூன் 24,) மன்னார் சவுத்பார் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த பகுதியில் தொண்ணூற்றெட்டு (98) பார்சல்களில் செய்யப்பட்ட நாற்பத்தாறு (46) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் ஒரு (01) சரக்கு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.