வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாலங்களை சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினரால் தொடர்ச்சியாக உதவி வழங்கப்படுகின்றன

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையால் நியமிக்கப்பட்ட மீட்புக் குழுக்களால் 2024 ஜூன் 06 ஆம் திகதி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் முப்பத்தாறு (36) குழுக்கள் நிவாரணப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளன. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கடும் மழையினால் அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் தடையை சீர்செய்தல், கடுவெல ஹெட்டிகே கால்வாயில் தடையாக இருந்த பாரிய மரமொன்றை அகற்றி அதில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் மற்றும் காலி வக்வெல்ல பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை இன்று (2024 ஜுன் 06) மேற்கொண்டுள்ளனர்.

கனமழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் தடுப்பும் ஆற்றங்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதனை சீர்செய்வதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறு நீர் வழங்கல் சபை விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் குழுவொன்றை அனுப்பி எரிபொருள் தடையை சீர்செய்தனர்.

அத்துடன், கடுவெல ஹெட்டிகே கால்வாய் அடைக்கப்பட்டதால் பாலத்திற்கு அருகாமையில் சிக்கியிருந்த பாரிய மரமொன்றை அகற்றும் பணியை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டதுடன், மேற்குறித்த நடவடிக்க்களுக்காக கடற்படையினரால் தேவையான நீர்மூழ்கி ஆதரவும் வழங்கப்பட்டது.

மேலும், கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வதால், காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை நீர்ப்பாசன திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் கடற்படையினர் முன்னெடுத்தனர்.