சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் ஒரு தொகுதி கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர், இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் 2024 ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு கல்பிட்டி, எத்தாலே எரம்புகொடெல்ல கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள. தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் தொகுதியொன்று கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2024 ஜூன் 04ம் திகதி கல்பிட்டி எரம்புகொடெல்ல கடற்கரை பகுதியில் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 31 பொதிகள் சோதனை செய்யப்பட்டன. குறித்த பொதிகளில் இருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாட்டில் தடைசெய்யப்பட்ட விவசாய இரசாயனங்கள் உள்ளிட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.