மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடுமையான காலநிலைக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு அனுப்பியுள்ள கடற்படை நிவாரண குழுக்கள் இன்று மாலை (03 ஜூன் 2024) ஆகும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்களில் இருந்து 102 நபர்களை மீட்டுள்ளன. சுமார் தொள்ளாயிரத்து பத்தொன்பது (919) பேருக்கு படகுகள் மூலம் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டன, மேலும் ஐம்பது (50) நிவாரண குழுக்கள் இன்னும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கடுவெல, மீதொட்டமுல்ல, சிதாவக்க, ஹன்வெல்ல, பியகம ஆகிய பகுதிகளுக்கு பதினான்கு (14) மீட்புக் குழுக்களையும், களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய, புளத்சிங்கள, இங்கிரிய, வெலிபன்ன ஆகிய பகுதிகளுக்கு ஒன்பது (09) மீட்புக் குழுக்களையும், கம்பஹா மாவட்டத்தின் தொம்பே, கம்பஹா மற்றும் வேயங்கொட பகுதிகளுக்கு நான்கு (04) அனர்த்த நிவாரணக் குழுக்களும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான மற்றும் கிரியெல்ல பகுதிகளுக்கு இரண்டு (02) அனர்த்த நிவாரணக் குழுக்களும், காலி மாவட்டத்தின் தவலம, உடுகம, பத்தேகம மற்றும் நாகொட பகுதிகளுக்கு ஆறு (06) அனர்த்த நிவாரணக் குழுக்களும், மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பத், அக்குரஸ்ஸ, பனாத்துகம, கம்புருபிட்டிய மற்றும் மாத்தறை பிரதேசங்களில் பதினைந்து (15) அனர்த்த நிவாரணக் குழுக்களுக்கு மொத்தம் ஐம்பது (50) அனர்த்த நிவாரணக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் குழுக்கள் தொடர்ந்தும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுடன் இணைந்து துரிதமாக நிலைநிறுத்தப்படுவதற்கு மேலதிக நிவாரணக் குழுக்கள் கடற்படையால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.