சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 05 பேரும் அவர்களுக்கு உதவிய 02 பேரும் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

2024 ஜூன் மாதம் 02 ஆம் திகதி இரவு தலைமன்னார் ஊருமலைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு குடியேறியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) இலங்கையர்கள் மற்றும் இந்த சட்டவிரோத செயலுக்கு உதவிய 02 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகள் மற்றும் ரோந்துகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஜூன் மாதம் 02 ஆம் திகதி தலைமன்னார், உருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள இரவு ரோந்துப் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஐந்து (05) பேர் அவதானித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த குழுவினர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, இக்குழுவிற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரும் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27 முதல் 42 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.