காலி தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காலி, பத்தேகம பிரதேசத்தில், கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட தொடம்கொட பாலத்தில் கடும் மழை காரணமாக சிக்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணத்தினால் பெய்து வரும் கனமழையால், கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் புதர்கள் உள்ளிட்ட கழிவுகள் கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட பாலங்களில் தேங்குகின்றன. குறித்த காரணத்தினால் அப்பகுதியில் ஏற்படகூறிய வெள்ள அபாயத்தைத் தடுக்க, 2024 மே 27 ஆம் திகதி சிறப்பு நடவடிக்கையொன்று தெற்கு கடற்படை கட்டளை தொடங்கியது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளயின் இணைக்கப்பட்ட சுழியோடி மற்றும் விரைவு அதிரடி கைவினைப் படை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டு, பெரும் முயற்சியுடன் தொடம்கொட பாலத்தில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, ஒழுங்கான முறையில் தண்ணீரை வெளியேற்ற தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.