மோசமான காலநிலையினால் மாதம்பே கடுப்பிட்டி ஓயா நிரம்பி வழிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம், மாதம்பே, கடுப்பிட்டி ஓய நிரம்பி வழிவதால் ஹேனபொல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 மே மாதம் 26 ஆம் திகதி கடற்படையின் நிவாரணக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதம்பே பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக பாயும் கடுப்பிட்டி ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், ஹேனபொல கிராம சேவையாளர் பிரிவுக்கான அனைத்து அணுகு வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த பின்னணியில், 27 குடும்பங்களைச் சேர்ந்த 89 நபர்கள் அனர்த்தத்தை எதிர்கொண்டதையடுத்து, புத்தளத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கடற்படையின் உதவியை நாடியுள்ளது. இதன் எதிரொலியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கடற்படையினர் வெள்ள நிவாரணக் குழுவை விரைந்து அனுப்பினர்.

அதன்படி இன்று (2024 மே 27,) காலை பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேசவாசிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை கடற்படை படகுகள் மூலம் வழங்க கடற்படை நிவாரணக் குழுவினர் ஏற்பாடு செய்து அப்பகுதியில் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை மற்றும் கரையோரக் காவல் திணைக்களத்தின் 41 நிவாரணக் குழுக்கள் அனைத்து கடற்படை கட்டளைகளும் கடற்படையால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.