சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்
இலங்கை கடற்படை; 2024 மே மாதம் 15ம் திகதி அன்று கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் கூடாரப்பு கடற்பகுதிகளிலும், மன்னார் தால்பாடு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், மின்சார விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், வணிக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரவு சுழயோடல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது (29) நபர்களுடன், பதினொரு (11) டிங்கிகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகளும் , சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மற்றும் சுழயோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும் , சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி, கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் குடாரப்பு கடற்பகுதிகளில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒன்பது டிங்கிகள் அவதானித்து சோதனை செய்யப்பட்டன. அங்கு சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மற்றும் இருபத்தி இரண்டு (22) நபர்களுடன் சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் இரவு சுழயோடல் நடவடிக்கைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி மன்னார் தல்பாடு கடற்பரப்பில் வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கஜபா என்ற இலங்கை கடற்படை கப்பல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) படகுகள் அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. இரண்டு (02) படகுகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகள் ,சுழயோடல் கருவிகள் மற்றும் வணிக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த ஏழு (07) பேர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முள்ளியான், சம்பியன்பத்து, தலையடி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் கடலப்பு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள், ஒன்பது (09) டிங்கிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டன. மன்னார் தல்பாடு கடற்பரப்பில் சந்தேகநபர்கள் 07 பேருடன் இரண்டு (02) படகுகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகள் மற்றும் சுழயோடி கருவிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.