மட்டக்களப்பில் சட்டவிரோத விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1440 மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!
இலங்கை கடற்படை மற்றும் மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்தில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்பட்ட ஆயிரத்து நானூற்று நாற்பது (1440) பிரேகபலின் காப்ஸ்யூல்கள் கையிருப்புடன் சந்தேக நபர் ஒருவர் (01) மற்றும் கார் (01) கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப்ப நிறுவனம், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில் அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையில் சென்ற காரை சோதனை செய்தனர். குறித்த காரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த ஆயிரத்து நானூற்று நாற்பது (1440) ப்ரீகபலின் கேப்சூல்களின் கையிருப்புடன் சந்தேகநபர் (01) மற்றும் கார் (01) ) இவ்வாறு கைது செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்டவர் என அடையாளம் காணப்பட்டப்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01), போதைப்பொருள் மற்றும் கார் கையிருப்பு வாகனம் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.