சட்டவிரோதமான முறையில் தங்கம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் கல்பிட்டியில் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

இலங்கை கடற்படை, புத்தளம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து 2024ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த தங்கம் என சந்தேகிக்கப்படும் தொன்மைப் பொருட்களுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய மற்றும் புத்தளம் பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு அந்த வீட்டில் கவனமாக மறைத்து சட்டவிரோதமாக வைத்திருந்த தங்கம் என சந்தேகிக்கப்படும் தொன்மைப் பொருட்களுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்பிட்டி எத்தாலே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் தொல்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.