வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது

கிளிநொச்சி, கூடாரப்பு மற்றும் சலை கடற்பகுதிகளில் 2024 மே 07ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத மின்சார ஒளிகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடக்கைகள் மேற்கொண்ட பதினொரு (11) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள், 650 கடலட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிளும் சட்டப்பூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிளும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 மே மாதம் 07 ஆம் திகதி கிளிநொச்சி, கூடாரப்பு கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்குட்பட்ட மாமுனை கடற்படை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) டிங்கி படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், மன்னார் மற்றும் சிலாபம் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், குறித்த உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் யாழ்.கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.