4 மில்லியன் ரூபாக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மன்னார், வங்காலை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது பத்து (10) கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு வேன் வண்டி (01) கைது செய்யப்பட்டது.
அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்ணி நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் 2024 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் நடத்தப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான வேன் வண்டி ஒன்றை கண்காணித்து சோதனை செய்தனர். அங்கு, வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பார்சல்களில் (05) பொதி செய்யப்பட்ட 10 கிலோ 690 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் (04) மற்றும் குறித்த வேன் வண்டியும் (01) கைது செய்யப்படப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த தெரு மதிப்பு நான்கு (04) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், நான்கு சந்தேகநபர்கள், 10 கிலோ 690 கிராம் கேரள கஞ்சா மற்றும் வேன் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.