தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
திருகோணமலை, ரதுகல கடற்பகுதியில் 2024 ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேருடன் (07) ஒரு டிங்கி படகு (01) மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2024 ஏப்ரல் 04, ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிறுவனத்திற்கு சொந்தமான அலஸ்காடன் கடற்படை பிரிவின் விரைவு நடவடிக்கைகள் படகுகள் படையணி மற்றும் சிறப்பு படகுகள் படைப்பிரின் கடற்படையினர் இணைந்து ரதுகல கடற்பகுதியில் மெற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேருடன் (01) டிங்கி படகு (01) மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 29 வயதுடைய திருகோணமலை ஏறக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏலு சந்தேகநபர்கள் (07) டிங்கி படகு (01) மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்வளத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.