02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது
இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 மார்ச் 22 ஆம் திகதி மாலை கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை முகாமின் கடற்படையினர் கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு படையணியுடன் இணைந்து உருத்திரபுரம் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குறித்த பகுதியில் சென்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர் அப்போது அவரிடமிருந்து விற்பனைக்காக எடுத்துச் சென்ற 07 கிலோ 025 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சாவின் மதிப்பிடப்பட்ட தெரு மதிப்பு சுமார் 02 மில்லியன் ரூபாய் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதி வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர், கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.